×

தேனியில் ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி முதியவர் பலி

தேனி, செப்.19: தேனியில் பைபாஸ் சாலையில், சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது ஆயுதப்படை போலீஸ் வேன் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆண்டிபட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன ஜக்கமநாயக்கர்(60). இவர் நேற்று முன்தினம் இரவு தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் சாலையில் வால்கரடு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தலைமைக் காவலரான குமார் என்பவர் ஓட்டி வந்த, தேனி ஆயுதப்படை போலீஸ் வேன் முதியவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார், ஆயுதப்படை போலீஸ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனியில் ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Theni ,Bypass Road ,Chinna Jakkamanayakar ,G. Kallupatti ,Andipatti ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில்...