×

மது போதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பல்லடம், செப். 19: பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா (28). இவர் நேற்று முன்தினம் பல்லடம் பஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது போதையில் வந்த திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மணிகண்டன் (37), கடலூரை சேர்ந்த கண்ணன் (45), ஆகிய 2 பேரும் சேர்ந்து பூபதிராஜாவை தாக்கி உள்ளனர். இதில், காயம் அடைந்த பூபதிராஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

The post மது போதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam ,Bhupathi Raja ,Palladam Manikkapuram Road ,station ,Manikandan ,Tirupur Pandyan ,
× RELATED பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய...