×

சில்லி பாய்ன்ட்…

* எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே உட்பட 10 அணிகள் களம் காணும் இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்.29ம் தேதி நடைபெறும். இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஒன்றிய தலைமைச் செயலகம் – ஒடிஷா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் – தமிழ்நாடு அணிகள் களம் காணுகின்றன.
* சென்னை டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7.00 மணி முதல் சேப்பாக்கம் ஸ்டேடிய வளாகத்தில் வாங்கலாம்.
* துலீப் கோப்பையின் கடைசி சுற்று போட்டிகள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இன்று தொடங்கிறது. இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் தலா 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளதில் சி,பி,ஏ முதல் 3 இடங்களில் முறையே 9, 7, 6 புள்ளிகளுடன் உள்ளன. டி அணி 2 ஆட்டங்களிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.
* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் செப்.19, 21, 24, 27 தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே நடந்தடி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.
* 632 நாள் இடைவெளிக்குப் பிறகு ரிஷப் பன்ட் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : MCC ,Murukappa Gold Cup Hockey ,Chennai Egmore Hockey Arena ,Indian Railways ,Dinakaran ,
× RELATED 95வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் செப்.19ல் தொடக்கம்