×

ராகுல் காந்தியின் நாக்கில் சூடு போட வேண்டும்: மகாராஷ்டிர பாஜ எம்பி சர்ச்சை பேச்சு

அமராவதி: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜார்ஜ் டவுன் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் அனைத்து மக்கள் இடையே சமமான நிலை ஏற்பட்டதும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் சிந்திக்கும். தற்போது அந்த நிலைமை ஏற்படவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா(ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்,இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய போவதாக கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் தருவேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த நிலையில்,மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜ எம்பி அனில் போண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சஞ்சய் கெய்க்வாட்டின் பேச்சு பற்றி நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அனில் போண்டே,‘‘நாக்கை அறுப்பேன் என்பது முறையான மொழி அல்ல. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் காந்தி பேசினார். எனவே வெளிநாட்டில் யாராவது தவறாக பேசினால், அவரது நாக்கை அறுப்பதை விட நாக்கில் சூடு போட வேண்டும். ராகுல் காந்தியானாலும் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்துகிறவர்களின் நாக்கை சூடு வைக்க வேண்டும்’’ சர்ச்சைக்குரிய விதமாக கூறினார். “என் நிகழ்ச்சியில் காங்கிரசார் கலந்து கொண்டால் அங்கேயே கொன்று புதைப்பேன்” என சிவசேனா(ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் நேற்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியு ள்ளார்.

The post ராகுல் காந்தியின் நாக்கில் சூடு போட வேண்டும்: மகாராஷ்டிர பாஜ எம்பி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Maharashtra ,BJP ,Amaravati ,Lok Sabha ,America ,Georgetown University ,Congress ,India ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...