×
Saravana Stores

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!!

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்கள். முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் (ம) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 (Khelo India Youth Games 2023), சென்னைப் பெருநகரப் பகுதியில் நடத்திய செலவான ரூபாய் 43.33 கோடி நிதியை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கினர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 (Khelo India Youth Games 2023), தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மற்றும் மதுரையில் கடந்த 19.01.2024 முதல் 31.01.2024 வரை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஏற்படும் செலவில், ரூபாய் 61.90 கோடியை அந்தந்த உள்ளூர் திட்டமிடல் ஆணையங்களின் நிதியிலிருந்து இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு வழங்க ஆணையிடப்பட்டதின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்னைப் பெருநகரப் பகுதியில் நடத்தப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்திய செலவான ரூபாய் 43.33 கோடி நிதியை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.33 கோடி மதிப்பிலான காசோலையை இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!! appeared first on Dinakaran.

Tags : Gallo India Sports Tournament ,Ministers ,Udayanidhi ,Shekharbabu ,Sports Development Authority ,CHENNAI ,Gallo India Games ,Chief Minister ,Youth Welfare (M) Sports Development Department ,Dinakaran ,
× RELATED சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு