- தஞ்சாவூர் மடகோட்டை
- தஞ்சாவூர்
- மடகோட்டா
- அங்காஞ்ச்
- தஞ்சாவூர் மனகர் தொல்கப்பியார் சதுக்கம்
- வண்டிகர தெரு
- தின மலர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கால்நடைகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தஞ்சாவூர் மாநகர் தொல்காப்பியர் சதுக்கம், வண்டிக்கார தெரு போன்ற பகுதிகளில் மாடுகள் மற்றும் குதிரைகள் அதிக அளவில் சாலைகளில் வலம் வருகின்றன. அதேபோல் தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு இரண்டு சாலைகள் செல்கின்றனர்.
இதில் மேரிஸ் கார்னர் வழியாக செல்லும் பாதை பிரதான சாலையாக விளங்குகிறது. இந்த சாலையில் உழவர் சந்தை, வேளாண் துறை அலுவலகம், தொழில் பேட்டை, மாவட்ட தொழில் மையம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளும், ஆவின் பால் நிலையம், தனியார் மருத்துவமனை, உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த சாலையில் அதிக அளவில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. மேலும் சாலையில் குருக்கே மாடுகள், குதிரைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து பட்டியலில் அடைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கால்நடைக்கு சொந்தமானவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
The post தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் மக்கள் அவதி appeared first on Dinakaran.