- ஓய்வூதியர் நல சங்கம்
- பெரம்பலூர்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
- ஊழியர்கள் மற்றும்
- தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
பெரம்பலூர், செப். 18: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணி யாளர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில், ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும்,
மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கிட வேண்டும். வாரி சுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வலியு றுத்தியும், ஓய்வு கால பணப்பலன்களை வழங்கா மல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்நேற்று (17ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் பகுதியிலுள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு அரசுபோக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணி யாளர்கள் மற்றும் பென்ச னர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்த சாமி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்ட, வட்டார அளவிலான நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர் கள் பலரும் கலந்து கொண்டனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்குவந்த பெரம்பலூர் போலீசார் சாலை மறிய லில் ஈடுப ட்ட 5 பெண்கள் உள்பட 75 பேர்களை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டது.
The post பெரம்பலூர் அருகே மறியலில் ஈடுபட்ட பென்சனர் நல சங்கத்தினர் 75 பேர் கைது appeared first on Dinakaran.