- மிலாத் நபி கொண்டாட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இஸ்லாமியவாதிகள்
- சென்னை
- நபிகள் நாயகம்
- அல்லாஹ்
- தீர்க்கதரிசி
- முஹம்மது
- மிலாத் நபியின் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று மிலாது நபி கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர்.
சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பெரும்பாலான இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றனர். ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கினர். இதுகுறித்து இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் கூறுகையில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிகச் சிறப்பாக உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வதும், உணவு கொடுப்பதையும் கடமையாக கொண்டிருக்கக் கூடிய இஸ்லாமியர்களின் மாண்பினை, மனிதநேயத்தை கண்டு அனைவரும் வியக்கிறார்கள். இதே சகோதரத்துவம், இதே கருணை இன்று மட்டுமல்ல என்றும் நிலைத்து நிற்க வேண்டும். நம்மை சூழ்ந்து நிற்கும் இருள் யாவும் விலகி, இனிமை உருவாக வேண்டும் என்று இந்த நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகம் முழுவதும் மிலாது நபி கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர் appeared first on Dinakaran.