- வெளியுறவு அமைச்சகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
- சென்னை
- மத்திய அமைச்சர்
- விஜய்
- விநாயகர் சதுர்த்தி
- சென்னை விமான நிலையம்
- நரேந்திர மோடி
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை அக்டோபர் 2ம் தேதி வரை நாடு முழுவதும் சேவை வாரமாக கொண்டாடுகிறோம்.
பாஜ சார்பில் இஸ்லாமியரான அப்துல் கலாமையும், பட்டியல் இனத்தவரான ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவையும் குடியரசு தலைவர்களாக தேர்வு செய்து, சமூகநீதியின் தந்தையாக பிரதமர் மோடி விளங்கி வருகிறார். நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்லவில்லை.
அதே நேரத்தில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வாழ்த்து சொல்கிறார். எனவே விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் மொட்டை அடித்து துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
The post இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.