×
Saravana Stores

பி.எட். விண்ணப்ப பதிவு 26ம் தேதி கடைசி நாள்

சென்னை: நடப்பாண்டு பி.எட். படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 26ம் தேதி விண்ணப்ப பதிவு செய்வதற்கு கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் உள்ள பி.எட். கல்லூரிகளில், இளநிலை பி.எட். படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.,

நடப்பாண்டில் பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது. விருப்பம் உள்ளவர்கள் செப்.26 வரை www.tngasa.in இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணத்தை, ஆன்லைன் மூலமாகவும், டிமாண்ட் டிராஃப்ட் (டிடி) மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில், இணைய வசதி இல்லாதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் கிடைக்கும் சேர்க்கை வசதி மையங்களின் உதவியுடன் பதிவு செய்யலாம். விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் தகுதியின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற கூடுதல் விவரங்களை www.tngasa.in இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

The post பி.எட். விண்ணப்ப பதிவு 26ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED அடுக்குமாடி கட்டுவதற்கான...