×
Saravana Stores

பிரதமர் இலவச வீடு திட்டம் 5.11 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,044 கோடி நிதி விடுவிப்பு: சட்டீஸ்கரில் மோடி வழங்கினார்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள புத்த தலாப் பகுதியில் உள்விளையாட்டு அரங்கில் ‘என் வீடு, என் உரிமை’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புவனேஸ்வரில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டார். அதில், பிரதமர் இலவச வீடு திட்டத்தின் கீழ் 5.11 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.2,044 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘சமூகத்தின் ஏழை, நலிந்த பிரிவினரின் வாழ்வில் செழிப்பை கொண்டு வருவதே பாஜ அரசின் குறிக்கோள்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைவதில் அரசு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் பேசுகையில், ‘‘சட்டீஸ்கர் மக்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. நவீன இந்தியாவின் விஸ்வகர்மாவான பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. 140 கோடி இந்தியர்களுக்கும் அவர் தொடர்ந்து சேவை செய்ய எனது நல்வாழ்த்துக்கள். அவர் நலமடைய இருக்க பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

The post பிரதமர் இலவச வீடு திட்டம் 5.11 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,044 கோடி நிதி விடுவிப்பு: சட்டீஸ்கரில் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chhattisgarh ,Raipur ,Bhubaneswar ,Indoor Stadium ,Budha Talab, Raipur, Chhattisgarh ,Free House ,
× RELATED லாரி மீது கார் மோதி சகோதரிகள், ஒருவர் பலி