×

வடமதுரை அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

வடமதுரை, செப். 18: வடமதுரை அடுத்துள்ள எரியோடு பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், முருகன், ஜாபர் சாதிக், வசந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுஎரியோடு மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள முனியப்பன் (35) என்பவரது வீட்டில் சோதனை நடத்தச் சென்றனர். இதனை அடுத்து முனியப்பன் அங்கிருந்து நைசாக ஓடிவிட்டார். இப்போது சம்பவ இடத்துக்கு எரியோடு போலீசார் வந்தபின் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல், அதே பகுதியில் மேலும் 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 6 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் மூலம் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, முனியப்பன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற முனியப்பன், வீட்டுக்கு திரும்பி வந்தார். எரியோடு இன்ஸ்பெக்டர் முருகன் உத்தரவின்படி முனியப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்தனர்.மேலும் 6 நபர்களுக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வடமதுரை அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Eriodu ,Selvam ,Murugan ,Zafar Sadiq ,
× RELATED வடமதுரை அருகே இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை