- பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலம்
- திருச்சி
- பொன்மலை ஜி கார்னர்
- திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை
- பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலம்
- தின மலர்
திருச்சி: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆர்இ பிளாக்குகளில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மண் சரிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி, உடனடியாக பொன்மலை ஜி.கார்னர் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினரால் 60 நாட்களில் பாலம் சீரமைக்கப்பட்டு கடந்த மார்ச் 12ம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் சீரமைக்கப்பட்ட இந்த பாலத்துக்கு அருகே சங்கிலியாண்டபுரத்துக்கு செல்லும் சப்வேக்கு அருகில் உள்ள பாலத்தில் கடந்த 10ம் தேதி 2 இடங்களில் லேசாக விரிசல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அந்த பகுதியை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பால விரிசலை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பாலத்தில் விரிசலை சரி செய்யும் பணியை நகாய் என்ற தனியார் நிறுவனம் இன்று காலை துவங்கியது. பாலத்தை ஆய்வு செய்து சாரம் கட்டி விரிசலை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
The post பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் விரிசல் சீரமைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.