- யாகி புயல்
- மியான்மர்
- யாகி சூறாவளி
- தென்சீன கடல்
- பிலிப்பைன்ஸ்
- தெற்கு சீனா
- வியட்நாம்
- லாவோஸ்
- யாகி
- தின மலர்
மியான்மர்: தென்சீன கடலில் உருவான யாகி சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது.
இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 226 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
The post மியான்மரில் யாகி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226-ஆக உயர்வு: 77 பேர் மாயம் appeared first on Dinakaran.