கொலம்பியா: பாப் இசை பாடகி ஷகிரா மியாமி பாடிக் கொண்டிருந்த போது அவரை ஆபாசமாக படம் எடுத்ததால், அவர் மேடையில் இருந்து வெளியேறினார். கொலம்பியா நாட்டின் பாப் இசை பாடகி ஷகிரா மியாமி, இரவு விடுதி ஒன்றில் சமீபத்திய வெளியான ‘சொல்டெரா’ பாடலைப் பாடிக் கொண்டு ஆடினார். மேடையில் அவர் மினுமினுப்பான உடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது, அவரை சுற்றி நின்றிருந்த ரசிகர்களில் ஒருவர், அவர் அணிந்திருந்த ஆடையின் கீழ்பகுதியை படம்பிடிக்கும் வகையில் கேமராவின் கோணத்தை காட்டி படம்பிடித்தார். அதனை பார்த்து ஷகிரா கடும் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அவ்வாறு வீடியோ எடுக்கக் கூடாது என்று அந்த ரசிகரை நோக்கி சைகையில் காட்டினார். மேலும், கேமராவை ஆடையின் கீழ்பகுதியில் இல்லாமல், முகத்தில் ஃபோகஸ் செய்யும்படி சைகை காட்டி எச்சரிக்கை விடுத்தார். இருந்தாலும் அவர் தொடர்ந்து பாடுவதற்கு மனமில்லாத்தால், திடீரென மேடையை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பதிவர் ஒருவர், ‘இதுபோன்ற வெட்கக்கேடான செயலை செய்யும், உங்களுக்கு (வீடியோ எடுத்த ரசிகர்) மனிதாபிமானம் இல்லையா?
உலகின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரான ஷகிரா, பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளாமல் அவரது பாடலுக்கு கூட நடனமாட முடியாதா? ஆண்கள் எல்லாவற்றையும் அழிக்கிறார்கள். இதுபோன்ற நபர்கள் மிகவும் அருவருப்பான மனநிலை கொண்டவர்கள்’ என்பது உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
The post கேமராவின் கோணத்தை பார்த்து அதிர்ச்சி; மேடையில் இருந்து வெளியேறிய பாப் இசை பாடகி: ஆண்களின் மனநிலை குறித்து கடும் விமர்சனம் appeared first on Dinakaran.