×

370-வது பிரிவு ரத்து என்பது கடவுள் செயல் அல்ல: உமர் அப்துல்லா பதில்

டெல்லி: அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்தது கடவுள் அல்ல; நாடாளுமன்றம் அந்த முடிவை எடுத்தது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா பதில் தெரிவித்துள்ளார். 370-வது பிரிவை ரத்து செய்த நடவடிக்கை மாற்றப்படக் கூடியதுதான். 370-வது பிரிவு வரலாறாகிவிட்டது, இனி அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட மாட்டாது என்ற அமித்ஷா பேச்சுக்கு உமர் அப்துல்லா பதில் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்க காரணம் ஒன்றிய பாஜக ஆட்சிதான் என்றும் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு வைத்தார்.

The post 370-வது பிரிவு ரத்து என்பது கடவுள் செயல் அல்ல: உமர் அப்துல்லா பதில் appeared first on Dinakaran.

Tags : God ,Umar Abdullah ,Delhi ,Chief Minister ,Jammu ,and Kashmir ,
× RELATED சொல்லிட்டாங்க…