சென்னை: ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில்; தனது தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ஆட்சேபமில்லா சான்று பெற அசோக்குமார் விண்ணப்பத்தார். விண்ணப்பத்தை தாசில்தாரருக்கு பரிந்துரை செய்ய ரூ.8000 லஞ்ச கேட்டதாக வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மீது புகார் அளித்தார். அசோக்குமார் தந்த புகாரில் வழக்கு பதிந்து நாகராஜனை திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அதே குற்ற எண்ணில் புலன் விசாரணை அதிகாரி வேறொருவருக்கு எதிராக வழக்கை பதிந்ததாக கூறி நாகராஜன் தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிலேகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.