×
Saravana Stores

வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைமகள் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் வனிதா மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப் பாட்டுஆலோசகர் தென்றல் ஆகியோர் இணைந்து வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளிடம் பேசிய பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, சமூக நீதி நாள் உறுதி மொழி, குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்துவம், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண் குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பல பிரச்சனைகள், பெண் குழந்தைகள் கடினமாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சமுதாயத்தில் அரசு அதிகாரிகளாக தகுதிபெற வேண்டும் என்றார்.

மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களானபெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, Women Help Desk 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930, ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றித் தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும்,மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) ஏற்படு த்தப்பட்டது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்,பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என உறுதி ஏற்கச் செய்தனர்.

The post வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Veppanthatta Govt Higher Secondary School ,Perambalur ,Perambalur District ,SP ,Adarsh Basera ,Perambalur District Crimes Against Women and Children ,SSI Maruthamuthu ,Veppanthatta Government Higher Secondary School Kalaimala ,
× RELATED போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு