×
Saravana Stores

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலம்

ஊட்டி : 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடந்தது. ஊட்டி அருகே பெர்ன்ஹில் ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் பவானி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றின் முகப்பில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இதனால் இந்த கோயில் ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில், நூற்றாண்டு பழமையானது. ஸ்ரீ சாமுண்டீஸ்வரி (பவானி அம்மன்) தேவியுடன் கூடிய புனிதமான சிவலிங்கம் நீலகிரியில் உள்ள ஒரே முழு அளவிலான சிவன் கோயில் இதுவாகும். இக்கோயில் மூன்று நிரை ராஜகோபுரம் கொண்டது. மூலவர் பவானீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.

அன்னை சாமுண்டீஸ்வரி மற்றும் பவானி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு 1910ம் ஆண்டு புகழ்பெற்ற வருடாந்திர ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. அன்றைய தினம் முதல் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன் சிறப்பாக நடந்து வருகிறது. நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் இந்த ஆருத்ரா தரிசனத்தின் போது, சிவ பெருமானை வீதி உலா அழைத்து வருவது வழக்கமாக உள்ளது. 1950களின் முற்பகுதியில், ஸ்ரீ ஸ்ரீ ஜெய சாமராஜேந்திர உடையார் கோயிலைப் புதுப்பிக்க உதவினார். மேலும், கோயில் மறு சீரமைப்பும் செய்யபட்டது. ஊட்டிக்கு விஜயம் செய்யும் போது அவரது உயரதிகாரி கோயிலுக்கு தவறாமல் சென்று வந்தனர்.

இந்த கோயிலில் கடந்த 1975ம் ஆண்டு முதன் முதலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு சிறப்புகள் கொண்ட ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று கோலகலமாக நடந்தது. முன்னதாக இந்த கோயிலில், கடந்த 14ம் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹிதி, தீபாரதனை, பிரசாம் வழங்குதல், மாலை 4.30 மணிக்கு முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை ப்ரவேசம், கும்பஸ்தாபனம், பூர்ணஹிதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி ஆகின நடந்தது.

15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, சம்தவிம்சிதி பூஜை, ருத்ர ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாஹிதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கோபுர கலசங்களை வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, சூக்தி பாராயணம், த்ரவ்யஹிதி, பூர்ணஹிதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கர் புறப்பாடு நடக்கிறது.

காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. 10.45 மணிக்கு மகா அபிஷேகம், தசதானம், தசதர்சனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், அம்மன், மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Sri Bhavaniswarar Temple Thirukuda Nannirattu Festival ,Kolakalam ,Sri Bhavaniswarar Temple Thirukuda Nannirattu Ceremony ,Sri Bhavanishwarar temple ,Bernhill ,Ooty ,Bhavani River ,Sri Bhavanishwarar Temple Thirukuda Nannirattu Festival Kolakalam ,
× RELATED தா.பேட்டையில் சூரம்ஹார விழா கோலாகலம் சூரனை சம்ஹாரம் செய்தார் முருகன்