×
Saravana Stores

மதுரையில் பிரபல தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தற்கொலை முயற்சி

மதுரை: மதுரையில் பிரபல தனியார் வங்கியில் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பால்பாண்டி என்பவர் தனது குடும்பத்தினருடன் குருணை மருந்தருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவர் அதே பகுதியில் தனது மனைவி சிவஜோதி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் தனது மனைவி சிவஜோதி பெயரில் ஊறுகாய் பணியை நடத்தி வந்துள்ளார். தனது தொழிலை மேம்படுத்துவதற்காக மதுரையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கொடுத்த பணத்தை கடந்த சில மாதங்களாக செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வங்கியின் ஊழியர்கள் பால்பாண்டியின் வீட்டிற்கு நேரடியாக வந்து கொடுத்த பணத்தை சரியாக செலுத்தக்கூறி நிர்பந்தித்ததாகவும், உடனே பணத்தை செலுத்த கூறியதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் பால்பாண்டி நேற்று இரவு 11 மணியளவில் 1 கிலோ குருணை மருந்தை வீட்டிற்கு வாங்கி வந்து தனது குடும்பத்தினருடன் மருந்தை அருந்தி இரவு தூக்கியுள்ளனர்.

அதிகாலை அனைவருக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் பாதிக்கப்பட்ட 5 பேரையும் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சி தொடர்பாக திருமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி தர முடியாததால் ஒரு குடும்பமே உயிர் துறக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரையில் பிரபல தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Balpandi ,Tirumangalam ,Dinakaran ,
× RELATED மதுரையில் பெயிண்டர் மர்மச்சாவு: போலீசார் தீவிர விசாரணை