தொண்டி,செப்.17: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டி கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி கூடங்களின் அருகில் கடைகளில் பீடி, சீகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக தெரிகிறது. பள்ளியில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள கடைகளில் இதுபோன்ற போதை பொருள்கள் விற்க அரசு தடை செய்துள்ளது. இருப்பினும் இது தொடர்கிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாவதோடு கல்வியும் பாதிக்கப்படுகிறது. அதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜிப்ரி கூறியது, மாணவர்கள் மத்தியில் புகையிலை பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பள்ளியின் அருகில் மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு புகையிலை பொருள்கள் உள்ளிட்ட எந்த போதை வஸ்துகள் கொடுத்தாலும் அந்த கடையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை போலீசார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post பள்ளிகளின் அருகே புகையிலை விற்பதை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.