- ராகுல் காந்தி
- சிவசேனா
- சட்டமன்ற உறுப்பினர்
- மும்பை
- மக்களவை
- எதிர்ப்பு
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- தலைவன்
- அமெரிக்கா
- தின மலர்
மும்பை: மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிவசேனா எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இடஒதுக்கீடு குறித்து ராகுல் பேசியிருந்தார். இந்நிலையில் ராகுலின் கருத்துக்கு சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராகுலின் அமெரிக்க பயணத்தின்போது அவர் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசினார்.
இது காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் மற்றும் இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் அவரது மனநிலையை காட்டுகின்றது. ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுப்பவருக்கு நான் ரூ.11லட்சம் சன்மானமாக வழங்குவேன்” என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சியில் பாஜவும் இடம்பெற்றுள்ளது. ஆனால் சிவசேனா எம்எல்ஏவின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை என்று மாநில பாஜ தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். சிவசேனா எம்எல்ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.