- விவசாயிகள்-தொழிலாளர் கட்சி
- நிர்மலா சீதாராமன்
- சென்னை
- தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி
- கட்டுமானத் தொழிலாளர்களின் மத்திய சங்கம்
- யூனியன்
- நிதி அமைச்சர்
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
- Ponkumar
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘நிர்மலா சீதாராமனுடைய செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தில் அமைச்சர்கள், பிரதமர், முதல்வர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஜனநாயகத்தின் எஜமானர்களாக மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள்.
அவர்களுடைய குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டியவர்கள். ஆனால் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நிகழ்விலும் ஆணவப்போக்கோடு செயல்படுவது அவருடைய வாடிக்கை. அவருடைய பேச்சும் உடல் மொழியும் எப்போதுமே இந்த ஆணவத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி செயலாளர் வெ.சித்ரா முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வின்சென்ட் வரவேற்றோர். மாநில பொதுச் செயலாளர் பொறி.எஸ்.ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post நிர்மலா சீதாராமனை கண்டித்து விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.