×

10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்

காஷ்மீர்: காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடைசியாக 2014ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் தேர்தல் நடைபெற உள்ளது. செப்.18, செப்.25, அக்.1 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியில் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல் – பழங்குடிகளுக்கானது 9. காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நேற்று மாலை 5 மணியுடன் ேதர்தல் பிரசாரம் ஓய்ந்நது. முதல் கட்ட தேர்தலில் சுமார் 23 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த உள்ளனர்.

தேர்தல் ஆணையம் 125 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மக்களவை எம்பியான இன்ஜினியர் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர்.
முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, செனாப் பள்ளத்தாக்கில் மூன்று இடங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

The post 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Kashmir Legislative Assembly ,Kashmir ,Dinakaran ,
× RELATED பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25...