×
Saravana Stores

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது: ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். தனியார் தொலைக்காட்சி சார்பில் டெல்லியில் நடந்த அவள் சக்தி 2024 என்ற மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி முர்மு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பெண்களை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்தும் பாரம்பரியம் உள்ளது. பெண்கள் சக்தியின் உருவமாக கருதப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நமது தேசத்தின் உண்மையான பலம் உள்ளது. இந்திய பெண்களின் வலிமை மற்றும் தைரியம், எல்லா தடைகளையும் அவர்களை முன்னேற வைக்கிறது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பின்மை உணர்வுகள் இன்னும் உள்ளன. பெண்களை பலவீனமாகக் கருதும் சமூக குறுகிய மனப்பான்மை மற்றும் பழமைவாதத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்பு நடந்துள்ளன.

இதனால், பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், சில சமூக தவறான எண்ணங்கள் இன்னும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. இவை பெண்களின் சமத்துவத்திற்கு தடைகளை உருவாக்குகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தான் நாட்டின் உண்மையான பலம் உள்ளது. பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து எந்த ஒரு பெண்ணும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் தான் எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முக்கியமானது. இது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. நாம் ஒன்று கூடி பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கு உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

The post நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது: ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : President ,Murmu ,New Delhi ,Drabupati Murmu ,Aa Shakti 2024 conference ,Delhi ,
× RELATED இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிக்க...