- ஜோ பிடன்
- கமலா
- ஏலான்
- நியூயார்க்
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
- ஏலோன் கஸ்தூரி
- டிரம்ப்
- மேற்கு பாம் பீச்
- புளோரிடா
நியூயார்க்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை, அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் இன்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நபர்கள் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே டிரம்பின் ஆதரவாளராக கருதப்படும் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ஜோ பைடன் (அமெரிக்க அதிபர்), கமலா ஹாரிஸ் (துணை அதிபர் மற்றும் அதிபர் வேட்பாளர்) ஆகியோரை கொல்ல யாரும் முயற்சிகூட செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
The post ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு appeared first on Dinakaran.