×
Saravana Stores

சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா

சென்னை: புரசைவாக்கம் சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில், மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். முதற்கட்டமாக புரசைவாக்கத்தில் உள்ள சுந்தரம் தெருவில் இயங்கி வரும் சமுதாய வல்லூரியில் 200 மகளிருக்கான தையல், ஆரி எம்பிராய்டரி பயிற்சியும், 75 மகளிருக்கு கணினி பயிற்சி, அழகு கலை பயிற்சியும் துவங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சிக்கான பயிற்சி பெறுபவரின் (மகளிர்) சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த சமுதாயக் கல்லூரிகளில் பயிற்சி 3 மாதம் முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் பயிற்சி சான்றிதழும், உதவித்தொகை தலா ரூ.1,000/- வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார். அண்ணாநகர் மண்டலக் குழுத் தலைவர் கூ.பி ஜெயின், மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,Mayor ,Priya ,Purasaivakkam ,Chennai Middle School ,Sundaram Street ,Purasaivakam ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி; மேயர் பிரியா அறிவிப்பு!