சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 5 ஏக்கரை மட்டுமே குத்தகைக்கு எடுக்க ஜெயின் ஜார்ஜ் கல்வி நிறுவனம் எஞ்சிய 20 ஏக்கர் நிலத்திலும் நீச்சல் குளம், விடுதி, விளையாட்டு மைதானம் அமைத்து ஆக்கிரமித்து வந்தது.
20 ஆண்டு குத்தகை காலம் 2013ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், அதன் பிறகும் நிலத்தை ஒப்படைக்காமல் கல்வி நிறுவனம் பயன்படுத்தி வந்தது. அதுமட்டுமின்றி குத்தகை தொகை ரூ.22 கோடி வழங்காதது குறித்தும். கல்வி நிறுவனத்துக்கு அரசு சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து நிலுவை தொகை வழங்காமலும், நிலத்தை ஒப்படைக்காமலும் காலம் தாழ்த்தி வந்ததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 25 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகும்.
The post சென்னை பூவிருந்தவல்லி அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.