×

மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு..!!

மதுரை: மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான புல் பிளான்ட் அமைந்துள்ளது. இங்கு புல் பிளான்ட் அறுவடை செய்து கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் வெள்ளக்கல் பகுதியில் விவசாய நிலம் அருகே உள்ள கோரை புற்கள் தீ பற்றியது.

கடந்த சில நாட்களாக மதுரையில் 102 டிகிரி வெப்பமடைந்துள்ளதால் திடீரென புற்கள் தீ பிடித்து எரிந்தது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாத நிலையில் காவல் துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வயல்வெளி பகுதியாக இருப்பதால் நேரடியாக தீயை அணைக்க முடியாமல் மரங்களின் கிளைகளை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் போராடி தற்போது தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

The post மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Vellakal ,Madurai ,Vellakal ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு