ஊட்டி : நீலகிரி மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் உட்பட 500க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்து, அலுவலக முகப்பில் கொடியேற்றினார். பின்னர், அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் சசிகுமார், ராஜா, காந்தள் ரவி, ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகர அவை தலைவர் ஜெயகோபி, துணை செயலாளர்கள் ரீட்டா, கிருஷ்ணன், நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், தம்பி இஸ்மாயில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், தியாகு, மார்க்கெட் ரவி, பெரியசாமி, ரகுபதி, சசிகுமார், ராஜ்குமார், மஞ்சுநாத், சிவகுமார், பிரேமா, நகராட்சி கவுன்சிலர்கள் மேரி புளோரீனா, வனிதா, செல்வராஜ், ரகுபதி, உதகை வடக்கு ஒன்றிய அவை தலைவர் குண்டன், ராமன், ஜோகி, பரமேஸ்வரி உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
The post மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.