×

தியாகராஜர் பாலிடெக்னிக் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு தேசிய அளவில் முதல் பரிசு

சேலம்:  இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், கல்வி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சிஐஐ தொழில் புதுமை விருது வழங்கப்பட்டு வரு வழங்கப்படும் இவ்விருதிற்கான போட்டியில், பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஐஐடி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கலந்து கொள்கின்றன. 2021ம் ஆண்டிற்கான போட்டியில், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, சோலார் மூலம் இயங்கும் நகரும் மருந்து தெளிப்பான், மின்சார பைக், நவீன வாகனம், ஸ்மார்ட் விவசாய கண்டுபிடிப்பு, சைக்கிள் கேம், கரும்பு சக்கையிலிருந்து செங்கற்கள் தயாரித்தல், இ-பஸ் பாஸ் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.பாலிடெக்னிக் பிரிவில், இவை சிறப்பான கண்டுபிடிப்புகளாக தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், சோனா குழும தலைவர் வள்ளியப்பா, துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா மற்றும் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர், விருது பெற்ற மாணவர்கள், துணை புரிந்த துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்….

The post தியாகராஜர் பாலிடெக்னிக் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு தேசிய அளவில் முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Salem ,Indian Federation of Labour ,CII ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...