×

திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை உயர்வு: புலிகள் கணக்கெடுப்பாளர்கள் தகவல்

திருவில்லிபுத்தூ: திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டெருமைகள், யானைகள், புலிகள் சிறுத்தைகள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வருகிற ஜனவரி மாதம் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுக்கும் பணியில் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் போது திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் ஏராளமான வரையாடுகைள பார்த்துள்ளனர். தற்போது மலைப்பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கணக்கெடுப்பாளர்கள் சிலர் கூறும்போது, திருவில்லிபுத்தூர் மலை உச்சி பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட போது பல்வேறு பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானைகளின் காலடி தடயங்களை பார்த்தோம். இதற்கு முன் இல்லாத அளவிற்கு மலைப்பகுதியில் வரையாடுகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார் உத்தரவின்பேரில் அடிக்கடி வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மலைப்பகுதியில் வேட்டை சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதனால், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்….

The post திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை உயர்வு: புலிகள் கணக்கெடுப்பாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : THIRUILLIPUTHUR ,Thiruvillibutu ,Thiruvillibutur ,Western Sequence Mountain Range ,Tiruvillibutur ,Tigers ,
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...