- தமிழ்
- தமிழ்நாடு
- ஆளுநர் ஆர்.என்.ரவி
- வைகோ கட்டாம்
- சென்னை
- அண்ணா
- காமராஜர் அரங்கம்
- மதிமுக
- மதிமுக
- பொதுச்செயலர்
- வைகோ
- துரை வைகோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ கூறியதாவது: முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலம் ரூ.7000 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மூடிவிட்டு சென்ற போர்டு கார் உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்கு திராவிட இயக்கமும், திமுகவும் இணைந்து செயல்படுவதைபோல் மதிமுகவும் திமுகவுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை.
தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் பதவி தேவையில்லாதது என்று அதற்காகத்தான் அண்ணா அன்றே சொன்னார். தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது. மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று முதல்வரே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை போல எந்த மாநிலத்திலும் மோசமான ஆளுநர் இருந்தது இல்லை: வைகோ காட்டம் appeared first on Dinakaran.