×

டாப்லெஸ்ஸாக நடித்த பாயல் ராஜ்புத்

சென்னை: இயக்குனர் அஜய் பூபதி இயக்கிய தெலுங்கு படம், ‘ஆர்எக்ஸ் 100’. இந்த படம் இந்தியிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. டோலிவுட், பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் இயக்கும் படம், ‘செவ்வாய்கிழமை’. இதில் ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் பிரபலமான பாயல் ராஜ்புத், ஷைலஜா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. படம் குறித்து அஜய் பூபதி கூறுகையில், ‘1990களில் கதை நடப்பது போல் உருவாக்கியுள்ளோம். ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் பின்னணியில் இந்த படம் உருவாகிறது. இதில் கதைக்கு தேவை என்பதால் டாப்லெஸ் காட்சியில் பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார்.

அந்த காட்சிகள் இளம் ரசிகர்களை அதிகம் கவரும். அது கண்டிப்பாக ஆபாசமாக இருக்காது. முகம் சுழிக்கும் அளவுக்கும் இருக்காது. கலை கண்ணோட்டத்துடன் இருக்கும். முழு படத்திலும் பாயல் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படத்தில் நடித்திருக்கும் 30 பேருக்கும் அவரவருக்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘ஆர்எக்ஸ்100’ சிந்து போல், ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் பேசப்படுவார். ‘கந்தாரா’ படத்துக்கு இசை அமைத்திருந்த அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார்’ என்றார். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி அஜய் பூபதி இயக்குகிறார்.

The post டாப்லெஸ்ஸாக நடித்த பாயல் ராஜ்புத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Payal Rajput ,Chennai ,Ajay Bhupathi ,Tollywood ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...