×
Saravana Stores

அகமதாபாத் – புஜ் இடையே நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டாடாநகர்: அகமதாபாத் – புஜ் இடையிலான நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத் – புஜ் வழித்தடத்தில் இன்று பிரதமர் மோடி ெதாடங்கி வைத்தார். ‘அகமதாபாத் – புஜ் வந்தே மெட்ரோ’ சேவையானது முற்றிலும் முன்பதிவில்லாத குளிர்சாதன வசதிகொண்ட ரயிலாகும். இதற்கான பயணச்சீட்டை ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக பயணச்சீட்டு மையங்களில் பயணிகள் வாங்கிக்கொள்ளலாம். சுமர் 1,150 பயணிகள் அமரும் வசதிகொண்ட இந்த ரயிலில், 2,058 பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கலாம்.

9 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ரயில், 360 கி.மீ. தொலைவை 5 மணிநேரம் 45 நிமிஷங்களில் சென்றடையும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேற்கண்ட ரயில் திட்டங்களுடன் ஆறு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைத்தார். அதாவது டாடாநகர் – பாட்னா, பாகல்பூர் – தும்கா – ஹவுரா, பிரம்மபூர் – டாடாநகர், கயா – ஹவுரா, தியோகர் – வாரணாசி, ரூர்கேலா – ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடம் போன்ற புனித யாத்திரை தலங்களுக்கு விரைவான பயணத்தை வழங்கும். மேலும் ரூ. 660 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

The post அகமதாபாத் – புஜ் இடையே நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Ahmedabad ,Buj ,Gujarat State ,Bhuj ,Jharkhand State Tadanagar ,India ,Dinakaran ,
× RELATED வடோதராவில் விமான உற்பத்தி ஆலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி