டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா ஒரு செ.மீ. தூரத்தில் தங்கத்தை இழந்த இரண்டாவது இடத்தைப் பெற்றார். உலகளவில் பிரபலான ஒன்றாகவும் மதிப்புமிக்க தடகள விளையாட்டுத் தொடராக பார்க்கப்படும் விளையாட்டுத் தொடர் டைமண்ட் லீக் தொடராகும்.
இந்த தொடர் பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில் செப். 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டி சனிக்கிழமையில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
கரீபிய தீவு நாடான கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். ஆனால், நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே எறிந்ததால், துரதிர்ஷ்டவசமாக, வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்க நேர்ந்தது.
ஆண்டர்சனைவிட வெறும் ஒரு சென்டி மீட்டரே குறைவாக வீசியதால், நீரஜ் தங்கப் பதக்கத்தை இழக்க நேரிட்டது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியின் ஜூலியன் வெப் 85.87 மீ வீசியதால், மூன்றாவது இடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்கு 12,000 டாலர் பெற்றார்.
முதல்முறையாக டைமண்ட் கோப்பையை வென்ற ஆண்டர்சனுக்கு 30,000 டாலர் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கான வைல்டு கார்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற டைமண்ட் லீக்கிலும், நீரஜ் சோப்ரா இரண்டாவது இடமே பெற்றிருந்தார்.
The post டைமண்ட் லீக் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் 1CM தூரத்தில் தங்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா appeared first on Dinakaran.