×
Saravana Stores

வக்பு வாரிய தலைவர் ராஜினாமா ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021 ஜூலையில் தலைவராக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெறாத நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் மற்றும் வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், வக்பு வாரிய தலைவர், உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்துல் ரகுமான் கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மீதான நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசி, எம்பிசி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார். இதையடுத்து, வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post வக்பு வாரிய தலைவர் ராஜினாமா ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Wakpu ,Tamil Nadu Govt ,Chennai ,M. Abdul Rahman ,Tamil Nadu Waqf Board ,Indian Union Muslim League ,DMK ,
× RELATED சொல்லிட்டாங்க…