×

ராஜஸ்தான் காங். எம்எல்ஏ மரணம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுபைர் கான்(62) நேற்று காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அதிகாலை சுபைர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ராம்கர் தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுபைர் மறைவிற்கு ஆளுநர் ஹரிபாக், முதல்வர் பஜன்லால் சர்மா, சபாநாயகர் வசுதேவ், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தான் காங். எம்எல்ஏ மரணம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan Cong ,Jaipur ,Zubair Khan ,MLA ,Rajasthan ,Subair ,Congress ,
× RELATED ஜெய்பூர் பெட்ரோல் பங்க் முன் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு