×

அசாம் அரசுத்தேர்வு இன்டர்நெட் நிறுத்தம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு கிரேடு III பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. 2305 மையங்களில் 11,23,204 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி வைக்க அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை மற்றும் அரசியல் துறை கூடுதல் தலைமைச் செயலர் அஜய் திவாரி கையெழுத்திட்ட இந்த அறிவிப்பில்,’பொதுத் தேர்வை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அசாம் அரசுத்தேர்வு இன்டர்நெட் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Assam Govt ,Guwahati ,Assam ,Dinakaran ,
× RELATED என்ஆர்சி.யில் பதிவு...