சென்னை: தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகிறார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டியை போல் தமிழ் சினிமாவிலும் பெண்கள் பாதுகாப்புக்காக கமிட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு கமிட்டியை நடிகை ரோகிணி தலைமையில் அமைத்தனர். இந்நிலையில் ரோகிணி கூறியது: பாலியல் சீண்டல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். இவ்வாறு ரோகிணி கூறினார்.
The post தமிழ் சினிமாத்துறையில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தருகிறார்கள்: நடிகை ரோகிணி தகவல் appeared first on Dinakaran.