×

ஆக்ரா பகுதியில் கனமழை தாஜ்மகாலில் தண்ணீர் கசிவு

ஆக்ரா: உபியில் பெய்த கனமழையால் உலக புகழ்பெற்ற தாஜ் மகாலின் குவி மாடத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. உபி மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகால் உலக அதிசயங்களுள் ஒன்றாகும். உலகின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலை பார்ப்பதற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று ஆக்ராவில் ஒரே நாளில் 151 மிமீ மழை கொட்டியது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்த நிலையில்,தாஜ்மகாலின் பிரதான குவி மாடத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடத்தின் அருகில் உள்ள பூந்தோட்டத்தில் வெள்ளம் நிரம்பியுள்ளது.

தாஜ்மகால் வளாகத்தில் உள்ள தோட்டம் நீரில் மூழ்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்திய தொல்லியல் துறையின்,மூத்த அதிகாரி ராஜ்குமார் படேல் கூறுகையில், ‘‘தாஜ்மகாலின் பிரதான குவிமாடத்தில் கசிவு காரணமாக கசிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நீர்கசிவால் கட்டிடத்திற்கு எந்த சேதமும் இல்லை’’ என்றார். அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி கூறுகையில்,‘‘தாஜ்மகால் என்பது ஆக்ராவிற்கும் முழு நாட்டிற்கும் பெருமைக்குரிய சின்னமாக உள்ளது. சுற்றுலாத் துறையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரே நம்பிக்கையாக இருப்பதால், நினைவுச்சின்னத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

The post ஆக்ரா பகுதியில் கனமழை தாஜ்மகாலில் தண்ணீர் கசிவு appeared first on Dinakaran.

Tags : Taj Mahal ,Agra ,Ubi ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் எம்எல்ஏ