×
Saravana Stores

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மக்கள் குறைதீர் முகாம்

 

அரியலூர், செப். 14: அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் முகாம், இன்று (14ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாமை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், முகாம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, அம்முகாமில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ration Shops People Grievance Camp ,Ariyalur District ,Ariyalur ,Public Grievance Camp ,Food Supply and Consumer Protection Department ,Ration Shops Public Grievance Camp ,Dinakaran ,
× RELATED உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை...