ஊட்டி, செப். 14: சாலையோரங்களில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் பட்டு போய் காட்சியளிக்கிறது. நீலகிாி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ஊட்டி சுற்று வட்டார கிராம பகுதிகள், முக்கிய சாலையோரங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தி விடாமல் இருக்கும் வண்ணம் இருப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இவை நடவு ெசய்யப்பட்ட புதிதில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் காலபோக்கில் அவற்றை பராமாிக்க வனத்துறையினர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மரக்கன்றுகள் சில பட்டு போய் விட்டன. சில மரக்கன்றுகளை சுற்றிலும் இரும்பு தடுப்புகளுக்குள் களை செடிகள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால் மரக்கன்றுகளின் வளர்ச்சியும் தடைபடுகிறது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post பராமரிப்பின்றி காணப்படும் சாலையோர மரக்கன்றுகள் appeared first on Dinakaran.