×
Saravana Stores

வெளிமாவட்டங்களில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை

 

திருப்பூர், செப்.14: திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரி மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் காந்திராஜன் தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் முருகசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.பொருளாளர் மாதேஸ்வரன் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார்.

பின்னர் 2024-27 ஆண்டு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவராக காந்திராஜன், பொதுச்செயலாளராக முருகசாமி,பொருளாளராக மாதேஸ்வரன், துணைத் தலைவர்களாக பக்தவச்சலம்,ஈஸ்வரன்,இணை செயலாளர்களாக செந்தில்குமார்,சுதாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .

கூட்டத்தில் வெளி மாவட்டங்களில் அனுமதி இல்லாமல் இயங்கும் சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தொழிலை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இந்தியா முழுவதும் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். திருப்பூர் சாய ஆலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஜாப் ஒர்க் வேலையை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வெளிமாவட்டங்களில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Dye Mill Owners Association ,South Rotary Hall ,Gandhi Rajan ,General Secretary ,Murugaswamy ,Treasurer ,Matheswaran ,Dinakaran ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்