×

கழுத்தை நெரித்து கணவன் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராஜா (36). மெக்கானிக். இவரது மனைவி ரீனா (36). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரீனா துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். உடலை கைப்பற்றிய போலீசார், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவுசெய்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ராஜாவின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக  புகார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் ராஜா கொலை செய்யப்பட்டதற்கான தடயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜாவின் மனைவி ரீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் ரீனாவின் அத்தை மகன் சதீஷ் (39) என்பவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரீனாவுக்கும், சதீசுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த ராஜா, பலமுறை மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இது தொடர்பாக தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சதீஷ், துப்பட்டாவால் ராஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக ரீனா தனது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் நாடகமாடியது தெரியவந்தது. சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கள்ளக்காதல் ஜோடி ரீனா, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post கழுத்தை நெரித்து கணவன் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Raja ,Goundampalayam Ambedkar Road, Coimbatore ,Reena ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!