×

வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்; பலி 226 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாமையும் மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங், ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களில் கடுமையான புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் கரையை கடந்தது. இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

யாகி புயல் மற்றும் கனமழை காரணமாக வியட்நாமின் வடக்கு பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 219 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து நேற்று மேலும் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

The post வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்; பலி 226 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Yagi ,Vietnam ,Hanoi ,Yagi storm ,Philippines ,Guang Nin ,Haitang ,Ho Bin ,northern Vietnam ,Dinakaran ,
× RELATED நட்புறவு திருவிழாவில் பங்கேற்பதற்காக...