- ஆவணி தபசு திருவிழா கோலாகலம்
- கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவில்
- சங்கரன்கோவில்
- தீப்பா உத்சவம்
- ஆவணி தபசு விழா
- கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில்
- அவனி தபஸ்
- கரிவலம்வந்தநல்லூர் ஸ்த்தியம்மாள் சமேத பால்வண்ணநாதன் கோவில்
- சங்கர நாராயண ஸ்வாமி கோயில்
- சங்கரன்கொயில்...
- ஆவணி தபஸ் திருவிழா கோலாகலம்
- கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதன் கோவில்
சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழாவில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு திருவிழா 14 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 10ம் தேதி இரவு 7 மணிக்கு நடந்தது. சிகர நிகழ்ச்சியான ஆவணித்தபசு தபசு திருவிழா 13ம் திருநாளான நேற்று கோலாலமாக நடந்தது.
இதை முன்னிட்டு மாலை 3 மணிக்கு ஒப்பனை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு மாலை 6.50 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி முகலிங்கநாதராகவும், தொடர்ந்து இரவு சுவாமி யானை வாகனத்தில் பால்வண்ணநாதராகவும் காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். ஆவணி தபசு காட்சி விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, கரிவலம் சண்முகவேல், கம்மவார் நாயுடு மகாஜன சங்க மண்டகப்படிதாரர்கள் மாநில பிரதிநிதி வெங்கடகிருஷ்ணன், மண்டல தலைவர் சின்னச்சாமி, மண்டல பொருளாளர் சகாதேவன், சங்கரன்கோவில் நகர தலைவர் அசோக்குமார், சரஸ்வதி கபே அய்யலுசாமி,
தொழிலதிபர் துரைராஜ், கரிவலம் நகரத் தலைவர் ராஜ்குமார், நகரச் செயலாளர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரவிக்கண்ணன், மோகன் குமார், ஆசிரியர் வெங்கடாசலபதி, பஞ். தலைவர்கள் தினேஷ், சரவண பெருமாள், மாரியப்பன், பழனிவேல் ராஜன், கணபதி, சுந்தர், வக்கீல் முனியசாமி, வேல்முருகன் நவநீதகிருஷ்ணன், ராமசாமி, ஜெயக்குமார், ருத்ரா அறக்கட்டளை கார்த்தி, மற்றும் அனைத்து மண்டகப்படிதாரர்கள், கோயில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.