×

பாஜவுக்கு அதிர்ச்சியளித்த சாவித்ரி ஜிண்டால்

சண்டிகர்: இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால். ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். கடந்த மக்களவை தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார். இதற்கிடையே, அரியானாவின் ஹிசார் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார். பாஜ வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை.

ஹிசார் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார். பாஜவில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜவுக்கு அதிர்ச்சியளித்த சாவித்ரி ஜிண்டால் appeared first on Dinakaran.

Tags : Savitri Jindal ,Bajaj ,Chandigarh ,India ,Naveen Jindal ,Jindal Group ,Congress ,BJP ,Lok Sabha elections ,
× RELATED ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டபோது நான் இல்லை என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்