- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- புற்றுநோய்க்கான டெலிகோபால்ட் கதிர்வீச்சு
- ராஜிவ்கண்டி அரசு மருத்துவமனை
- சென்னை
- சுப்பிரமணியன்
- ராஜீவ் காந்தி ஊராட்சி
- பொது
- மருத்துவமனை
- ராஜீவ்கந்தி அரசு மருத்துவமனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், புற்றுநோய்க்கான டெலிகோபால்ட் கதிர்வீச்சு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
* கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவி தொடக்கம்
ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் – புற்றுநோய் புறக்கதிர்வீச்சு சிகிச்சைக்காக அதிநவீன கோபால்ட் கருவி இன்று (13.09.2024) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள ஈக்வினாக்ஸ் தெரெட்ரானிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கதிர்வீச்சு கருவியானது உலகத்தரம் வாய்ந்ததும் தொழில்நுட்பத்தில் முதன்மையான கருவியாகும். இம்மருத்துவ கருவி உயர் ஆற்றல் கொண்ட காமா கதிர்களை உருவாக்கி அதனை புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின் மீது மட்டும் பாய்ச்சி புற்றுநோய் செல்களை முழுவதுமாக அகற்றுவதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உணவு குழாய் புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்த இயலும்.
இக்கருவி மூலம் உயர் ஆற்றல் காமா கதிர்களை பாய்ச்சுவதற்கு முன்பு சி.டி.ஸிமுலேட்டர் என்ற துணைக்கருவி மற்றும் சிகிச்சை திட்ட முறை (Treatment planning) என்ற மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலம் அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டு அவ்விவரங்களை இக்கருவிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிப்பதால் துல்லியமாகவும் துரிதமாகவும் சிகிச்சை அளிக்க முடியும். இந்த புற்றுநோய்களை 25 முதல் 30 முறைகளில் மொத்தமாக 5 முதல் 6 வாரங்களில் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய திசுக்கள் அல்லது உறுப்புகளுக்கு கதிர்வீச்சின் தாக்கம் இல்லாத வண்ணம் துல்லியமாக கொடுத்து முழுமையாக குணப்படுத்தலாம்.
மேலும் இக்கருவியால் பெரும்பாலான நோயாளிகளை புறநோயாளிகளாக வைத்து வெறும் சில மணித்துளிகளில் சிகிச்சை அளிக்க இயலும். தனியார் மருத்துவமனையில் பல இலட்ச ரூபாய் செலவில் மட்டுமே பெறக்கூடிய இச்சிகிச்சைகளானது அரசு மருத்துவமனைகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அளிக்கப்படுகிறது.
* புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நூற்றாண்டு விழா
இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையில் முன்னோடியாகவும் உலகத்திலேயே புற்றுநோய்க்கான சிகிச்சையில் x – கதிர்வீச்சுகளை பயன்படுத்திய 2 வது மருத்துவமனை எனும் பெருமையும் பெற்றுள்ளது. 1924 ஆம் ஆண்டு இம்மருத்துவமனையிலேயே கதிரியக்கத்துறை இயக்குனரான கேப்டன் T.W.பர்னார்ட் அவர்களால் 200kv கதிர்வீச்சு சிகிச்சை கருவியானது கிழக்கு மாகாணத்திலேயே முதல் முறையாக நிறுவப்பட்டு புற்று நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை தொடங்கப்பட்டது.
இம்மருத்துவமனைகளில் புற்று நோய் கதிர்வீச்சு துறையில் ஆரம்பகால அடிப்படை கருவிகளான
1. குவி கதிர்கற்றை கருவி (convergent Beam Therapy)
2. பெண்டுலம் கருவி (pendulum therapy)
3. கோபால்ட் – 60 புறக்கதிர்வீச்சு கருவி (Telecobalt Therapy)
4. நேரியல் முடுக்கி (Linear Accelator)
5. உள்கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரேடியம் இடுகருவிகள் (Radium Needles)
6. LDR உள் கதிர்வீச்சு கருவிகள் (LDR Brachytheraphy)
7. அதிநவீன HDR உள்கதிர்வீச்சு கருவிகள் (HDR Brachytheraphy) வரை நோயாளிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
* 1924 முதல் கடந்த 100 ஆண்டுகளாக இந்த பர்னார்ட் புற்றுநோய் கதிர்வீச்சு நிறுவனம்,
* கோபால்ட் – 60 கருவி மூலம் சுமார் 10 லட்சம் நோயாளிகளுக்கும்,
* நேரியல் முடுக்கி மூலம் 93,386 நோயாளிகளுக்கும்,
* உள்கதிர்வீச்சு மூலம் 1,651 நோயாளிகளுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டாக இத்துறை மூலம் மேற்கூறப்பட்ட கருவிகள் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள புற்றுநோயாளிகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள புற்றுநோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை
* தொடக்கம் – 1664
* பரப்பளவு – 28.8 ஏக்கர்
* 12,54,528 சதுரடி
* மொத்த படுக்கை வசதிகள் – 3,707
* மொத்த பிரிவுகள் – 68
* புறநோயாளிகள் நாளொன்றுக்கு – 6,564
* உள்நோயாளிகள் நாளொன்றுக்கு – 2,225
பணிகள் நடைபெறும் கட்டிடங்கள்
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
ரூ.132.24 கோடி – 15 தளங்கள் கொண்ட முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விடுதி கட்டிடம் (காளங்கள் அமைக்கும் பணி). ரூ.65 கோடி – 4 தளங்கள் கொண்ட நரம்பியல் துறை கட்டிடம்
முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஏற்படுத்தப்பட்ட வசதிகள்
அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனை, சென்னை
* ரூ.29.93 கோடி – தொற்றுநோய் மற்றும் சுவாச அவசர மற்றும் தீவிர பராமரிப்பு வசதிகளுக்கான பிரிவு – 17.02.2024 (Hon’ble CM )
* ரூ.49.85 இலட்சம் – அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவர் ஓய்வு அறை, சிறப்பு சிகிச்சை பிரிவு, உட்பட பல்வேறு வசதிகள் – HHM – 01.08.2022
* ரூ.6.15 கோடி – அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனை – சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் நவீன மருத்துவ உபகரணங்கள், இன்டிரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் கருவி, நாற்பரிணாம எக்கோ கருவி மற்றும் பல்வேறு வசதிகள் – HHM – 22.10.2022
* ரூ.9.83 கோடி – அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனை – கதிரியக்க அலைவீச்சு கருவி மற்றும் மின்தூக்கிகள் – HHM – 01.12.2022
* ரூ.2.84 கோடி – அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனை – இரத்த நாள அறுவை சிகிச்சை உயர் சிறப்பு நிலையம், தன்னியக்க நரம்பு மண்டல ஆய்வகம் இருதய நோய் சிறப்பு பரிசோதனை மற்றும் பல்வேறு வசதிகள் – HHM – 11.08.2023
* ரூ 1.71 கோடி நவீன சமயலறை பல்வகை கைபேசி மின்னேற்ற நிலையம் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், தங்கும் அறை, வண்ண படுக்கை விரிப்புகள் மற்றும் நோய் தகவல் ஏடுகள் – HHM – 25.11.2023
* ரூ.14.56 கோடி செலவில் மூளை இரத்தநாளம்சார் கேத் ஆய்வகம் (Biplane DSA), எம்.ஆர்.ஐ இணக்கமான மயக்க மருந்து செலுத்தும் உபகரணம் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் (CSR நிதி பங்களிப்பு – இன்போசிஸ் நிறுவனம்), இதயம் மற்றும் நுரையீரல் கருவி, அதிநவீன அல்ட்ரா சவுண்ட் இயந்திரம் (USG Machine), அதிநவீன இரத்தநாள அடைப்பு நீக்கும் மற்றும் உறிஞ்சும் கருவி, அதிநவீன லேசர் கருவி (CSR நிதி பங்களிப்பு – TIIC), போதை மருந்து கண்டறியும் ராண்டக்ஸ் மல்டிஸ்டாட் (தானியங்கி) கருவி மற்றும் காற்று மாசு அளக்கும் கருவி -29.06.2024 (HHM ).
The post சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், புற்றுநோய்க்கான டெலிகோபால்ட் கதிர்வீச்சு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.