×
Saravana Stores

வணங்கான் தலைப்பு: இயக்குநர் பாலா பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சார்பில் மேல்முறையீடு செய்த வழக்கில் இயக்குநர் பாலா பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வணங்கான் என்ற தலைப்பை 2020-ல் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
‘வணங்கான்’ தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வணங்கான் தலைப்பு: இயக்குநர் பாலா பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bala ,Chennai ,Chennai High Court ,Vanangaan ,South Indian Film and Television Association ,Dinakaran ,
× RELATED ரூ.250 கோடி சொத்தை பாதுகாக்க நடிகர் பாலா 4வது திருமணம்